×

வீடு கட்டி தருவதாக ரூ.14,599 கோடி மோசடி கட்டுமான நிறுவன மாஜி அதிகாரி திகார் சிறையில் அடைப்பு

புதுடெல்லி: டெல்லி அருகேவுள்ள நொய்டாவை தலைமையிடமாக கொண்டு கடந்த 2007ம் ஆண்டு முதல் ஜேபி இன்ஃப்ராடெக் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் இயங்கி வருகிறது. குடியிருப்புகள், வணிக வளாகங்களை கட்டும் இந்நிறுவனம் ஜேபி விஷ்டவுன், ஜேபி கிரீன்ஸ் திட்டங்களில் வீடு கட்ட முதலீடு செய்வது தொடர்பாக பல்வேறு கவர்ச்சிகரமான விளம்பரங்களை வௌியிட்டது. இதனை நம்பி ஆயிரக்கணக்கானோர் வீடு வாங்க முதலீடு செய்தனர். ஆனால், அவ்வாறு முதலீடு செய்யப்பட்ட பணம் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படாமல் முறைகேடான வழியில் திருப்பி விடப்பட்டதால், வீடு வாங்க பணம் தந்தவர்கள் ஏமாற்றப்பட்டனர்.

வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாடிக்கயைாளர்கள் நொய்டா காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் ரூ.14,599 கோடி ஏமாற்றப்பட்ட வழக்கில் ஜேபி இன்ஃப்ராடெக் நிறுவனத்தின் முன்னாள் எம்டி மனோஜ் கவுர் கடந்த நவம்பர் 13ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.பின்னர் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் மனோஜ் கவுருக்கு அளிக்கப்பட்ட இடைக்கால ஜாமீன் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து சரணடைந்த மனோஜ் கவுர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : Tihar ,New Delhi ,Jaypee Infratech ,Noida ,Delhi ,Jaypee Wishtown ,Jaypee Greens ,
× RELATED வாக்காளர் பட்டியல் வெளியிட்ட...