×

ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு: மார்ச் 9ம் தேதி விசாரணை ஒத்திவைப்பு

சுல்தான்பூர்: மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்திக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணை மார்ச் 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு கர்நாடகத் தேர்தலுக்கு முன் பெங்களூரில் நடந்த தேர்தல் பேரணியில் ராகுல்காந்தி அப்போது பாஜவின் தலைவராக இருந்த அமித் ஷா குறித்து பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து ராகுல்காந்திக்கு எதிராக உள்ளூர் பாஜ தலைவர் விஜய் மிஸ்ரா புகார் கொடுத்தார். புகாரின்பேரில் சுல்தான்பூரில் உள்ள எம்பி, எம்எல்ஏ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் ஆஜராவதற்காக மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி நேற்று காலை 10.40மணியிளவில் நீதிமன்றத்துக்கு வந்தார். ராகுல்காந்தியின் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து வழக்கு விசாரணை மார்ச் 9ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சுமார் 11.15மணிக்கு நீதிமன்றத்தில் இருந்து ராகுல் காந்தி வெளியேறினார்.

Tags : Rahul ,Sultanpur ,Lok Sabha ,Rahul Gandhi ,2018 Karnataka elections ,Bengaluru ,BJP ,president ,Amit Shah… ,
× RELATED வாக்காளர் பட்டியல் வெளியிட்ட...