கலவரத்தில் படுகாயம் மணிப்பூர் பாஜ எம்எல்ஏ பலி: 2 வருட சிகிச்சை பலன் அளிக்கவில்லை

இம்பால்: மணிப்பூர் கலவர கும்பலால் படுகாயம் அடைந்த பா.ஜ எம்எல்ஏ வுங்சாசின் வால்டே பலியானார். மணிப்பூரில் 2023 ஆம் ஆண்டு இன வன்முறையின் ஆரம்ப காலத்தில் கும்பல் தாக்குதலில் மணிப்பூரின் பாஜ எம்எல்ஏ வுங்சாகின் வால்டே காயம் அடைந்தார். சோமி பழங்குடியின சமூகத்தை சேர்ந்த 61 வயதான அவர் பெர்சாவ்ல் மாவட்டத்தை சேர்ந்தவர். இம்பாலின் நாகமாபால் பகுதியில் நடந்த வன்முறையில் கடந்த 2023 மே மாதம் படுகாயம் அடைந்தார். இதையடுத்து டெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு 2 வருட சிகிச்சை முடிந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சுராச்சந்த்பூர் திரும்பினார்.பிப்.7ல் அவரது உடல் நிலை மோசம் அடைந்ததால் குருகிராம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் பலியானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: