விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றம் கடலை செடியில் பூச்சி நோய் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு பயிற்சி சாத்தனப்பட்டு கிராமத்தில் நடந்தது

ஜெயங்கொண்டம், பிப்.5: ஆண்டிமடம் வட்டாரம் சாத்தனப்பட்டு கிராமத்தில் வேளாண்மை துறையின் கீழ் அட்மா திட்டத்தின் கீழ் நிலக்கடலை சாகுபடி விவசாயிகளுக்கு பூச்சி நோய் கட்டுப்பாடு தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் ராஜலட்சுமி தலைமை ஏற்று இயற்கை முறையில் பூச்சி நோய்களை கட்டுப்படுத்த விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினார் . மேலும் இப்பயிற்சியில் பூச்சி, நோய்களை கட்டுப்படுத்த சூடோமோனஸ் மற்றும் டிரைகோடெர்மா விரிடி கொண்டு விதை நேர்த்தி செய்து விதைத்தல், இனக்கவர்ச்சிப் பொறிகளை பயன்படுத்துதல், பறவை இருக்கைகள் அமைத்தல் , மஞ்சள் வண்ண ஒட்டுப் பொறி பயன்படுத்துதல், இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்த தேமோர் கரைசல் தெளித்தல் , மகசூலை அதிகரிக்க ஏக்கருக்கு 5 கிலோ நுண் சத்து உரம் இடுதல் , பூக்கும் மற்றும் விழுது இறங்கும் சமயத்தில் ஏக்கருக்கு 2 கிலோ கடலை ரிச் தெளித்தல் முதலிய தொழில்நுட்பங்களை பின்பற்றிட விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வேளாண்மை உதவி அலுவலர் பழனிவேல் மற்றும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் கலைமதி ஏற்பாடு செய்திருந்தனர்.

Related Stories: