மாமரங்களில் காய் பிடிப்பு அதிகரிப்பு

வேப்பனஹள்ளி, ஏப்.14: தமிழகத்தில் மா உற்பத்தியில், கிருஷ்ணகிரி மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. வேப்பனஹள்ளி மற்றும் சுற்றுப்புற பகுதியில், விவசாயிகள் பரவலாக மா சாகுபடி செய்துள்ளனர். தற்போது மா சீசன் துவங்கியுள்ளதால், மரங்களில் மாங்காய்கள் காய்த்து தொங்குகின்றன. வேப்பனஹள்ளி -கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அத்திகுண்டா பகுதியில் உள்ள தோட்டங்களில் மரம் முழுவதும் காய்கள் நிறைந்து காணப்படுகிறது. இம்முறை விளைச்சல் நன்றாக இருக்கும் என்றும், பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி மழை இல்லாமல் மழை மட்டும் பெய்தால், விளைச்சல் இன்னும் அமோகமாக இருக்கும் என்றும் விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related Stories: