சென்னை: கனடா அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய கனடா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
