×

உலகக்கோப்பை டி20: தெறிக்க விட்ட தென் ஆப்ரிக்கா

புதுடெல்லி: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான உலகக் கோப்பை டி20 போட்டியில் நேற்று, தென் ஆப்ரிக்கா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் 34வது போட்டி, டெல்லியில் நேற்று, டி பிரிவில் நடந்தது. முதலில் ஆடிய எமிரேட்ஸ் அணியின துவக்க வீரர்கள் ஆர்யன்ஷ் சர்மா 13, கேப்டன் முகம்மது வாஸீம் 22 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். பின் வந்தோரில் அலிஷான் ஷரபு சிறப்பாக ஆடி 45 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் மிக மோசமாக ஆடி சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதனால், 20 ஓவர் முடிவில் எமிரேட்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 122 ரன் மட்டுமே எடுத்தது.

தென் ஆப்ரிக்கா தரப்பில் கோர்பின் பாஷ் 3, ஆன்ரிச் நார்ட்ஜே 2 விக்கெட் வீழ்த்தினர். அதன் பின், 123 ரன் வெற்றி இலக்குடன் தென் ஆப்ரிக்கா அணியின் துவக்க வீரர்கள் கேப்டன் அய்டன் மார்க்ரம், குவின்டன் டிகாக் களமிறங்கினர். மார்க்ரம் 11 பந்துகளில் 28 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். டிகாக் 14 ரன்னில் வீழ்ந்தார். பின் வந்த ரையான் ரிக்கெல்டன் 16 பந்துகளில் 30, டெவால்ட் புரூவிஸ் 25 பந்துகளில் 36 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 6, ஜேசன் ஸ்மித் 3 ரன் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர். அதனால், தென் ஆப்ரிக்கா 13.2 ஓவரில் 4 விக்கெட் மட்டுமே இழந்து 123 ரன் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பதிவு செய்தது. கோர்பின் பாஷ் ஆட்ட நாயகன்.

உலகக்கோப்பை டி20 சூப்பர் 8 சுற்று போட்டிகள்
தேதி/நேரம் இடம் அணிகள்
21.2.2026 இரவு 7 மணி கொழும்பு நியூசிலாந்து-பாகிஸ்தான்
22.2.2026 பிற்பகல் 3 மணி கண்டி இலங்கை-இங்கிலாந்து
22.2.2026 இரவு 7 மணி அகமதாபாத் இந்தியா-தென் ஆப்ரிக்கா
23.2.2026 இரவு 7 மணி மும்பை ஜிம்பாப்வே-வெஸ்ட் இண்டீஸ்
24.2.2026 இரவு 7 மணி கண்டி இங்கிலாந்து-பாகிஸ்தான்
25.2.2026 இரவு 7 மணி கொழும்பு இலங்கை-நியூசிலாந்து
26.2.2026 பிற்பகல் 3 மணி அகமதாபாத் வெஸ்ட் இண்டீஸ்-தென் ஆப்ரிக்கா
26.2.2026 இரவு 7 மணி சென்னை இந்தியா-ஜிம்பாப்வே
27.2.2026 இரவு 7 மணி கொழும்பு இங்கிலாந்து-நியூசிலாந்து
28.2.2026 இரவு 7 மணி கண்டி இலங்கை-பாகிஸ்தான்
01.3.2026 பிற்பகல் 3 மணி டெல்லி ஜிம்பாப்வே-தென் ஆப்ரிக்கா
01.3.2026 இரவு 7 மணி கொல்கத்தா இந்தியா-வெஸ்ட் இண்டீஸ்

Tags : World Cup T20 ,South Africa ,New Delhi ,United ,Arab Emirates ,Delhi ,
× RELATED டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்:...