×

சில்லி பாய்ன்ட்…

* ரஞ்சி பைனலுக்கு காஷ்மீர் தகுதி
கல்யாணி: ரஞ்சி கோப்பை அரையிறுதிப் போட்டிகள் கடந்த 15ம் தேதி முதல் நடந்து வருகின்றன. கல்யாணி நகரில் நடந்த போட்டியில் ஜம்மு காஷ்மீர், பெங்கால் அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் பெங்கால் அணி 328 ரன்களும், ஜம்மு காஷ்மீர் 302 ரன்களும் எடுத்தன. பின்னர் 2வது இன்னிங்சை ஆடிய பெங்கால், அகிப் நபி தர், சுனில் குமார் ஆகியோரின் அட்டகாச பந்து வீச்சில் சிக்கி தலா 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அதனால், அந்த அணி, 99 ரன்னுக்குள் சுருண்டது. அதையடுத்து, 2வது இன்னிங்சை ஆடிய ஜம்மு காஷ்மீர் அணி, 4 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், ரஞ்சி வரலாற்றில் முதல் முறையாக ஜம்மு காஷ்மீர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

* இனரீதியில் திட்டியதாக வினிசியஸ் புகார்
லிஸ்பன்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிகள், போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த போட்டியில் ரியல் மாட்ரிட் – பென்ஃபிகா அணிகள் மோதின. போட்டியின் 50வது நிமிடத்தில் சிறப்பான வகையில் கோலடித்த ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் வினிசியஸ் ஜூனியர் அதை கொண்டாடும் வகையில் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தார். அதைக்கண்டு, எதிரணி ரசிகர்கள் ஆவேசமாக அவரை நோக்கி கூச்சலிட்டனர். பாட்டில்களை வீசினர். அப்போது, பென்ஃபிகா அணி வீரர் கியான்லூகா பிரெஸ்டியானி, வினிசியஸ் அருகில் வந்து கோபமாக ஏதோ கூறினார். அதையடுத்து, தன்னை இனரீதியில் திட்டியதாக வினிசியஸ், நடுவரிடம் புகார் தந்தார். அதையடுத்து, போட்டி 10 நிமிடம் நிறுத்தப்பட்டது. கடைசியில் 1-0 என்ற கோல் கணக்கில் மாட்ரிட் அணி வெற்றி பெற்றது.

Tags : Kashmir ,Ranji ,Kalyani: ,Ranji Trophy ,Jammu ,Bengal ,Kalyani ,
× RELATED டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்:...