×

நமீபியா அணியை நசுக்கிய பாகிஸ்தான்: சாகிப்ஷதா அதிரடி சதம்; சூப்பர் 8க்குள் நுழைந்தது

கொழும்பு: உலகக் கோப்பை டி20 தொடரின் 35வது போட்டி இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று நடந்தது. அதில், பாகிஸ்தான் – நமீபியா அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய பாக். துவக்க வீரர் சயீம் அயூப் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் சாகிப்ஷதா ஃபர்ஹான் அட்டகாசமாக ஆடி 58 பந்துகளில் 4 சிக்சர், 11 பவுண்டரிகளுடன் 100 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவரில் பாக். 3 விக்கெட் மட்டுமே இழந்து 199 ரன்கள் குவித்தது. அதையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நமீபியா களமிறங்கியது. அதன் துவக்க வீரர்கள் ஜேன் பிரைலின்க் 9, லோரென் ஸ்டீன்கேம்ப் 23 எடுத்து ஆட்டமிழந்தனர். பின் வந்த வீரர்களில் அலெக்சாண்டர் பசிங் வோல்செங்க் 20 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கங்களில் பரிதாபமாக ஆட்டமிழந்து நடையை கட்டினர். 17.3 ஓவரில் நமீபியா 97 ரன்னுக்கு சுருண்டது. அதனால், பாக். 102 ரன் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியை அடுத்து ஏ பிரிவில் 2ம் அணியாக பாக். சூப்பர் 8 சுற்றில் நுழைந்தது.

சூப்பர் 8 சுற்றில் நுழைந்த அணிகள்
குரூப் அணி நிலை
ஏ பிரிவு இந்தியா முதல்
ஏ பிரிவு பாகிஸ்தான் 2வது
பி பிரிவு இலங்கை முதல்
பி பிரிவு ஜிம்பாப்வே 2வது
சி பிரிவு வெஸ்ட் இண்டீஸ் முதல்
சி பிரிவு இங்கிலாந்து 2வது
டி பிரிவு தென் ஆப்ரிக்கா முதல்
டி பிரிவு நியூசிலாந்து 2வது

Tags : Pakistan ,Namibia ,Shakib Shadda ,Super 8 ,Colombo ,World Cup T20 ,Sri Lanka ,Sayeem Ayub ,
× RELATED டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்:...