×

ஐஎஸ்எல் கால்பந்து: முதல் போட்டியில் இன்று சென்னை- மும்பை மோதல்

மும்பை: ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் இன்று, சென்னையின் எப்சி – மும்பை சிட்டி அணிகள் மோதவுள்ளன. இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டிகள் இன்று துவங்கவுள்ளன. மும்பையில் நடக்கும் முதல் போட்டியில் சென்னையின் எப்சி – மும்பை சிட்டி அணிகள் மோதுகின்றன. இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துவங்குகிறது. இப்போட்டியை தொடர்ந்து, வரும் 20ம் தேதி நடக்கும் போட்டியில் முகம்மதன் எஸ்சி – கோவா அணிகளும், 21ம் தேதி ஈஸ்ட் பெங்கால் – ஸ்போர்டிங் டெல்லி, ஜாம்ஷெட்பூர் – பஞ்சாப் எப்சி அணிகள் மோதுகின்றன. 22ம் தேதி நடக்கும் போட்டிகளில் பெங்களூரு – நார்த்ஈஸ்ட் யுனைடெட், கேரளா பிளாஸ்டர்ஸ் – மும்பை சிட்டி அணிகள் மோதுகின்றன. சென்னை – மும்பை அணிகள் இதுவரை 27 போட்டிகளில் ஆடியுள்ளன. அவற்றில் சென்னை 7 போட்டிகளிலும், மும்பை 16 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 4 போட்டிகள் டிரா ஆகியுள்ளன. இன்றைய போட்டியில் பலம் வாய்ந்த மும்பை அணியை வெற்றி கண்டு கணக்கை துவக்க, சென்னையின் எப்சி வீரர்கள் முனைப்பு காட்டுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : ISL ,Chennai ,Mumbai ,Chennai FC ,Mumbai City ,Indian Super League ,Mumbai… ,
× RELATED டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்:...