×

திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம்

குன்னூர், பிப்.19: குன்னூர் நகர இளைஞரணி ஆலோசனை கூட்டத்தில் கருமத்தம்பட்டி மாநாட்டிற்கு 500 இளைஞர்கள் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 22ம் தேதி கருமத்தம்பட்டியில் நடைபெறவுள்ள மேற்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் குன்னூர் திமுக நகர அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு நகரச் செயலாளர் ராமசாமி தலைமை வகித்தார். நகர இளைஞரணி அமைப்பாளர் சையது மன்சூர் வரவேற்றுப் பேசினார். இக்கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பத்மநாபன், நகர அவைத் தலைவர் தாஸ், மாவட்ட பிரதிநிதி மணிகண்டன், தலைமைக்கழக பேச்சாளர் ஜாகிர் உசேன், கவுன்சிலர் ராபர்ட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் குன்னூரிலிருந்து 500 இளைஞர்களைத் திரட்டிச் செல்வது என தீர்மானிக்கப்பட்டது.

 

Tags : DMK Youth Advisory Meeting ,Coonoor ,Coonoor City Youth Advisory Meeting ,Karumathampatti Conference ,Western Zone Youth Wing Executives Meeting ,Karumathampatti ,
× RELATED ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில்...