×

கைகாட்டி, மஞ்சூர் பகுதிகளில் குரங்குகள் தொல்லை பொதுமக்கள் அவதி

மஞ்சூர், பிப்.16: கைகாட்டி, மஞ்சூர் பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள், பயணிகள் அவதி அடைந்துள்ளார்கள். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கைகாட்டி. இது மஞ்சூர், ஊட்டி, குன்னூர், மஞ்சக்கம்பை, மேலூர் சுற்றுவட்டார பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் சாலையின் மையப்பகுதியில் உள்ளதால் இப்பகுதியில் வாகனப்போக்குவரத்து மிகுதியாக இருப்பதுடன் அனைத்து அரசு பஸ்களும் இப்பகுதியில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்லும். இதனால் எந்த நேரமும் பொதுமக்கள் மற்றும் பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்படும். கடைகள் மற்றும் குடியிருப்புகளுடன் தேயிலை தொழிற்சாலையும் உள்ளது.

இந்நிலையில் கைகாட்டி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் முகாமிட்டு பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. பஸ்களுக்காக காத்திருக்கும் பயணிகள் கைவசம் வைத்திருக்கும் பைகளை குரங்குகள் பறித்துச்சென்று அதில் உள்ள பொருட்களை தரையில் கொட்டி நாசம் செய்கிறது. மேலும் சிறுவர், சிறுமிகள், குழந்தைகள் கைகளில் இருந்து திண்பண்டங்களை பிடுங்கி செல்வதும் வாடிக்கையாக உள்ளது. பல சமங்களில் பொருட்கள் மற்றும் திண்பண்டங்களுக்காக பயணிகளை குரங்குகள் மிரட்டுவதுடன் அவர்களை தாக்கவும் முற்படுவதால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டு உள்ளது.

Tags : GAIGATI ,MANJUR AREAS ,Manjur ,Kaigati ,Manjoor ,Nilgiri district ,Kaikati ,Manchuria ,Ooty ,Kunnur ,Manchkambai ,Malur ,
× RELATED கோத்தகிரி அரசு மருத்துவமனையில்...