×

கோத்தகிரி அரசு மருத்துவமனையில் முதல்வர் திறக்க உள்ள கூடுதல் கட்டிடம் ஆய்வு

கோத்தகிரி,பிப்.14: கோத்தகிரி அரசு மருத்துவமனையில் கட்டப்பட்ட கூடுதல் கட்டிடத்தை வருகிற 16ம் தேதி முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சி காலத்தில் பராமரிப்பு இன்றி, அடிப்படை தேவைகள் இன்றியும், மருத்துவர்கள் குறைபாடுகளுடன் கோத்தகிரி அரசு மருத்துவமனை செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் கோத்தகிரி அரசு மருத்துவமனை கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு புனரமைப்பு செய்யப்பட்டு சுகாதார துறை அமைச்சர் மூலம் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. அப்போது பொதுமக்கள் சார்பில் கோத்தகிரி ஒன்றிய கழகம் மூலம் கூடுதல் கட்டிடம் வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.இதையடுத்து ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் புதிய கூடுதல் கட்டிடம் 16 படுக்கை வசதியுடனும், 5 குழந்தைகள் வார்டு, மருத்துவர்கள் ஓய்வு அறை, நவீன கழிப்பிடம் கட்டப்பட்ட நிலையில் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

பணிகள் நிறைவடைந்த புதிய கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக வரும் 16ம் தேதி திறக்க உள்ளார். பணிகள் நடந்து முடிந்த புதிய மருத்துவமனை கூடுதல் கட்டிட பணிகளை கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன், துணை செயலாளர் மு.க.கணபதி மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.

 

Tags : Chief Minister ,Kotagiri Government Hospital ,Kotagiri ,M.K. Stalin ,AIADMK ,
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது