×

பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனுடன் 62 இமெயில், 14 சந்திப்புக்கள்: பாஜ அமைச்சர் ஹர்தீப் பூரி விளக்கமளிக்க காங். வலியுறுத்தல்

புதுடெல்லி: ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பாலியல் குற்றாளி எப்ஸ்டீனுடன் 62 இமெயில்கள் மற்றும் 14 சந்திப்புக்களை நடத்தியது தொடர்பாக தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.  டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் ஊடகம் மற்றும் விளம்பரத் துறை தலைவர் பவன்கேரா கூறுகையில்,‘‘அமைச்சர் ஹர்தீப் பூரி 32 இமெயில்களை எப்ஸ்டீனுக்கு எழுதி இருக்கிறார்.

எப்ஸ்டீன் 30 இமெயில்களை அவருக்கு அனுப்பி இருக்கிறார். ஹர்தீப் 14 முறை எப்ஸ்டீனை சந்தித்துள்ளார். பிரதமர் மோடி 2014ம் ஆண்டு பதவிக்கு வந்த உடனேயே இவை தொடங்கி 2017ம் ஆண்டு வரை தொடர்ந்துள்ளன. கேள்வி என்னவென்றால் 2014ம் ஆண்டு ஜூன் 2014ம் ஆண்டில் ஹர்தீப் எந்த பதவியை வகித்தார். அவர் எந்த பதவியின் அடிப்படையில் எப்ஸ்டீனை சந்தித்தார்? சமீபத்திய நேர்காணலின்போது அமைச்சர் பல பொய்களை பேசினார்.

ஒரு சாதாரண குடிமகனான ஹர்தீப் பூரி எப்ஸ்டீனுடன் அரசு கொள்கைகளை எப்படி பகிர்ந்து கொண்டார்? முதலில் அவர் ராஜினாமா செய்துவிட்டு பின்னர் இந்த விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும். அவர் ஒன்றன்பின் ஒன்றாக பொய்களை சொல்லி தன்னைத் தவறு என்று நிரூபித்துள்ளார். இவ்வளவு பொய்களை கூறி அவர் யாரை பாதுகாப்பதற்கு முயற்சிக்கிறார்?” என்று தெரிவித்துள்ளார்.

Tags : Epstein ,Congress ,BJP ,minister ,Hardeep Puri ,New Delhi ,Union minister ,Hardeep Singh Puri ,Congress party ,
× RELATED ரயில்வே பாதுகாப்பு திட்டங்களுக்கான...