×

மேற்கு வங்க பாபர் மசூதி கட்டுமான நிதி வங்கதேசத்தில் இருந்து வந்துள்ளது: பாஜ எம்எல்ஏ சுவேந்து அதிகாரி குற்றச்சாட்டு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம், பெல்தங்காவில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஹூமாயுன் கபீர் அயோத்தி பாபர் மசூதி வடிவத்தில் புதிய மசூதி கட்டி வருகிறார்.  இந்த நிலையில் மேற்கு வங்க சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் மூத்த பாஜ தலைவருமான சுவேந்து அதிகாரி நேற்று பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ஹூமாயுன் கட்டி வரும் பாபர் மசூதி கட்டுமான பணிக்கான 50 சதவீதம் தொகை வங்கதேசத்தில் இருந்து வருகிறது.வங்கதேசத்தில் ஜமாத் இ இஸ்லாமி மற்றும் திரிணாமுல் காங்கிரசிற்கும் தொடர்பாக ஹூமாயுன் உள்ளார். சிறுபான்மையினரிடையே மம்தா பானர்ஜிக்கான ஆதரவை அதிகரிப்பதற்கான ரகசிய வேலைகளில் ஹூமாயுன் ஈடுபட்டுள்ளார். இதற்காக ஹூமாயுன் சமீபத்தில் வங்கதேசத்திற்கு சென்று வந்தார் என்றார்.

Tags : West Bengal ,Babri ,Masjid ,Bangladesh ,BJP ,MLA ,Suvendu Adhikari ,Kolkata ,Humayun Kabir ,Trinamool Congress MLA ,Belthangah, Murshidabad district ,Babri Masjid ,Ayodhya ,Leader of ,West Bengal Legislative Assembly ,
× RELATED ரயில்வே பாதுகாப்பு திட்டங்களுக்கான...