×

அஜித்பவார் விமானவிபத்தில் மரணம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்: மனைவி சுனேத்ரா பவார் கோரிக்கை

மும்பை: தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மகாராஷ்டிரா துணை முதல்வருமான அஜித்பவார் கடந்த ஜனவரி 28ம் தேதியன்று மும்பையில் இருந்து பாராமதிக்கு சென்றபோது விமான விபத்தில் பலியானார். இதனை தொடர்ந்து அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா பவார் துணை முதல்வரானார். இதனிடையே அஜித் பவார் இறந்துவிட்டதால் அவர் வகித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பதவி காலியானது.

இந்த இடத்துக்கு யாரை தேர்ந்தெடுப்பது என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில்தான் திங்கட்கிழமை நடந்த கட்சி கூட்டத்தில் சுனேத்ரா, கட்சியின் தேசிய தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. வரும் 26ம் தேதி சுனேத்ரா முறைப்படி கட்சியின் தேசிய தலைவர் பொறுப்பை ஏற்கிறார். இதற்கிடையே அஜித்பவாரின் மரணமடைந்த விமான விபத்து சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக் கோரி துணை முதல்வர் சுனேத்ரா பவார் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் முதல்வர் பட்நவிசை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

பின்னர் பேசிய கட்சியின் மூத்த தலைவர் சுனில் தட்கரே, ‘எங்களது கோரிக்கை தொடர்பான ஒன்றிய உள்துறை அமைச்சகத்திடம் பேசுவதாக முதல்வர் உறுதியளித்துள்ளார். அரசாங்கம் ஏற்கனவே விசாரணையை தொடங்கி உள்ளது. மேலும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவதாக உறுதியளித்துள்ளது. ஒன்றிய அமைப்பு விசாரணை நடத்தினால் சரியாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம்’ என்றார்.

Tags : Ajit Pawar ,Sunetra Pawar ,CBI ,Mumbai ,Nationalist Congress Party ,NCP ,Maharashtra ,Deputy Chief Minister ,Baramati ,Ajit Pawar… ,
× RELATED ரயில்வே பாதுகாப்பு திட்டங்களுக்கான...