பெங்களூரு: பெங்களூரு கோரமங்களா உள்விளையாட்டு அரங்கத்தில் மகளிர் கிரிக்கெட் போட்டியாளர்களின் 3 நாள் செலிபிரிட்டி நிகழ்ச்சி நடந்தது. இதில் கன்னட டிவி நடிகை ஒருவர் கலந்து கொண்டார். அப்போது ஸ்டேடியத்தில் இருந்த கழிவறையை பயன்படுத்தி இருக்கிறார். அங்கு ரகசியமாக கேமரா வைக்கப்பட்டு அவரை படம்பிடித்து அவருக்கு வீடியோவை அனுப்பி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இது குறித்து நடிகை அளித்துள்ள புகாரில், ‘நான் கோரமங்களா உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த 3 நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றேன். பிப்.7ம் தேதி இரண்டாம் நாள் நிகழ்ச்சியின் ேபாது மகளிர் கழிப்பறையை பயன்படுத்தினேன். அப்போது எனக்கு தெரியாமல் யாரோ மர்மநபர் ரகசியமாக என்னை ஆபாசமாக படம்பிடித்துள்ளார். இந்த வீடியோவை எனது கணக்கு என்று நினைத்து எனது நண்பரின் இன்ஸ்டாகிராம் கணக்குக்கு அனுப்பியுள்ளனர்.
அதில் இடம்பெற்றிருந்த வீடியோ மிக மோசமாக இருந்தது. இதையடுத்து சிலர் வீடியோ காலில் தொடர்பு கொண்டு மேலும் பல ஆபாச வீடியோக்கள் சமூகவலைதளத்தில் பதிவேற்றுவோம். அதனால் நாங்கள் கேட்கும் பணத்தை கொடுக்க வேண்டும் என்று எனது நண்பரை மிரட்டியுள்ளனர். ’ என குறிப்பிட்டுள்ளார். மேலும் வீடியோ, புகைப்படங்களையும் அவர் ேபாலீசில் ஒப்டைத்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
