×

மின்சார பேருந்து திட்டம்: சொன்னாரு..! செஞ்சாரு..!!

சொன்னாரு: திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் டீசல் பேருந்துகளுக்கு மாற்றாகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
செஞ்சாரு: புதிய ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், மின்சார பேருந்துகளை இயக்குவதற்கான ஆயத்தப்பணிகள் போக்குவரத்து துறையால் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, 2025ம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிலேயே அரசு போக்குவரத்துக் கழகங்களில் முதல் முறையாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் ரூ.47.50 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட வியாசர்பாடி மின்சாரப் பேருந்து பணிமனையை திறந்து வைத்தார். மேலும், சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் முதற்கட்டமாக ரூ.207 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான 120 புதிய தாழ்தள மின்சார பஸ்கள் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, பெரும்பாக்கம், பூந்தமல்லி, தண்டையார்பேட்டை மற்றும் பல்லவன் இல்லம் ஆகிய பணிமனைகளில் இருந்து மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமான ஆர்டர் செய்யப்பட்ட 625 பேருந்துகளில், தற்போது வரை 380 பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. மீதமுள்ள 245 பேருந்துகள் இம்மாதம் இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வர உள்ளன. இதுமட்டுமின்றி, இந்த தாழ்தள மின்சார பேருந்துகள் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயணிக்க எளிதாக உள்ளதால் அரசின் நடவடிக்கை பலரது வரவேற்பை பெற்றுள்ளது. ஒவ்வொரு பேருந்தும் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 200 கி.மீ வரை செல்லும் திறன் கொண்டது. பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்கள், ஜிபிஎஸ் மற்றும் அவசரகால பொத்தான்கள் பொருத்தப்பட்டு பயணிகளின் வசதிக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மின்சார பேருந்துகளை விரைவாக அறிமுகப்படுத்தியது, ‘விடியல் பயணம்’ , டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மற்றும் ‘சென்னை பஸ்’ செயலி போன்ற முன்னெடுப்புகளுக்காக இந்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் 2025 நவம்பர் மாதம் நடைபெற்ற Urban Mobility India மாநாட்டில், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு ‘நாட்டின் சிறந்த பொது போக்குவரத்து அமைப்பு’ என்ற தேசிய விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது. தமிழக அரசின் முக்கிய இலக்கு 2030க்குள் ஒட்டுமொத்த அரசு பேருந்துகளில் 30 சதவீதம் மின்சார பேருந்துகளாக இயக்குவது என இலக்கை நோக்கி பயணித்து அதற்கான திட்டங்களை வகுத்து வருகிறது. இதுதவிர, சென்னையில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் 20 எலக்ட்ரிக் டபுள் டெக்கர் பேருந்தையும் போக்குவரத்து துறை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* மின்சார பேருந்து எதிர்கால திட்டம்
சென்னை, கோவை, மதுரை, சேலம், நெல்லை போன்ற நகரங்கள் மின்சார பேருந்துகளை இயக்குவதற்கான முன்னோடி நகரங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவ்வகையில் ஆண்டுக்கு சராசரியாக 500 முதல் 700 பஸ் வீதம் அடுத்த 5 ஆண்டுகளில் 6,500க்கும் மேற்பட்ட புதிய மின்சார பஸ்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர போக்குவரத்து துறை எதிர்கால திட்டமிடலை நோக்கி பயணிக்கிறது.

உலக வங்கி மற்றும் ஜெர்மன் வங்கியின் நிதியுதவியுடன் மொத்தம் ரூ.1,580 கோடியில் 500 மின்சார பேருந்துகள் உட்பட 2,700 பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆண்டு நிதி ஒதுக்கீடு முக்கியத்துவம்
2021-22 623.59
கோடி ரூபாய் 500 மின்சார பேருந்துகள் மற்றும் பிஎஸ் -6 பேருந்துகள் வாங்க இடைக்கால ஒதுக்கீடு.
2024-25 697
கோடி ரூபாய் முதற்கட்டமாக 625 தாழ்தள மின்சாரப் பேருந்துகளை இயக்க மொத்த திட்ட மதிப்பு.
2025-26 207
கோடி ரூபாய் சென்னையில் முதற்கட்டமாக இயக்கப்பட்ட 120 பேருந்துகளுக்கான மதிப்பு.

Tags : Sonnaru ,Sencharu ,DMK ,MK ,Stalin ,
× RELATED மார்ச் 15 (அ) 16ல் தேர்தல் தேதி அறிவிப்பு?