- முன்னாள் அமைச்சர்
- வெள்ளமண்டி நடராஜன்
- நிலை
- அமைப்பு
- எடப்பாடி பழனிசாமி
- சென்னை
- வெல்லமாண்டி நடராஜன்
- வெளியுறவு அமைச்சின் செயலாளர்
- ஆட்டமுகாவில் ஓ. பன்னிர்செல்வம்
- எடப்பாடி கே.
- பழனிசாமி
- அக்கட்சி
- இபிஎஸ்
- OPS
சென்னை: முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அதிமுக அமைப்புச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளது. அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி ஆகிய இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட்டதையடுத்து அக்கட்சியில் பல்வேறு குழப்பங்கள் இருந்தன. ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்களை இபிஎஸ் தரப்பு நீக்கியபோது ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளரான வெல்லமண்டி என். நடராஜனும் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, அவர் ஓ. பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், ஓ. பன்னீர்செல்வம் திடீரென அண்மையில் திமுகவில் ஐக்கியமானார்.
இதனையடுத்து, அவரது சர்பு நிர்வாகிகள் குழப்பத்தில் இருந்த நிலையில், வெல்லமண்டி என். நடராஜன் அதிமுகவில் மீண்டும் இணைந்தார். இந்நிலையில் அண்மையில் அதிமுகவில் மீண்டும் இணைந்த வெல்லமண்டி நடராஜனுக்கு அமைப்புச் செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவின் அமைப்புச் செயலாளராக வெல்லமண்டி நடராஜனை நியமனம் செய்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
