சென்னை : தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி மார்ச் 15 அல்லது 16ம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டைத் தொடர்ந்து கேரளாவில் தனது ஆய்வை இன்று முடிக்கும் தேர்தல் ஆணையர்கள், நாளை (மார்ச் 8) முதல் 3 நாட்களுக்கு மேற்குவங்கத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்கின்றனர். மேற்கு வங்கத்தில் 5 முதல் 7 கட்டங்களாகவும், மற்ற 4 மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
