×

நாங்கள் யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை திமுக-காங். கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை: விஜய் வசந்த் எம்.பி. பதிலடி

சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், புதுச்சேரியில் நடக்கும் காங்கிரஸ் பாதயாத்திரையில் கலந்துகொள்வதற்காக அவசரமாக செல்வதால் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. புதுச்சேரி நிகழ்ச்சியை முடித்துவிட்டு, சென்னையில் நடக்கும் பாதயாத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். அதன் பின்பு காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். காங்கிரஸ்-திமுக கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை முடிவு செய்யும். இப்போதைக்கு, கூட்டணியில் பிரச்னை எதுவும் இல்லை.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர், அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து பேசி இருக்கிறார். கட்சி கட்டுப்பாட்டை மீறி பொதுவெளியில், கூட்டணி குறித்து பேசி வருபவர்கள் மீது, தலைமையிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும். திமுக கூட்டணி வேண்டாம் என்று நாங்கள் யாரும் கூறவில்லை. ஊடகங்கள் தான் அதைபோல் திரித்து வெளியிடுகின்றனர். எங்களுடைய சில கோரிக்கைகளை நாங்கள் வைத்துள்ளோம். வருகிற 22ம் தேதி, பேச்சுவார்த்தை நடக்க இருக்கின்ற நிலையில், இப்போது அதுகுறித்து எதுவும் பேச வேண்டியது இல்லை. காங்கிரஸ்- திமுக கூட்டணி தொடர்ந்து இருபது ஆண்டுகளாக இருந்து வரும் வெற்றி கூட்டணி. இரு கட்சிகளும் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வருகிறது. கூட்டணி உறவு அழுத்தமாகவும், ஆழமாகவும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* ‘தமிழிசைக்கு தகுதியில்லை’
‘‘காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் தலைவர்களை தலைமையால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறுவதற்கு, அவருக்கு (தமிழிசைக்கு) தகுதி இல்லை. அவர்கள் கட்சிக்குள் இருக்கும் தலைவர்களையே, அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால்தான் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, தேவையில்லாத கருத்தை, அவர்களின் கட்சித் தலைவர்கள் கூறுகிறார்கள். முதலில் அவரை அதை கட்டுப்படுத்த சொல்லுங்கள். எங்கள் கட்சியை கட்டுப்படுத்த எங்களுக்கு தெரியும்’’ என்று விஜய் வசந்த் எம்பி தெரிவித்தார்.

Tags : DMK- ,Congress ,Vijay Vasanth ,Chennai airport ,general secretary ,K.C. Venugopal ,Congress Padayatra ,Puducherry ,Chennai… ,
× RELATED மார்ச் 15 (அ) 16ல் தேர்தல் தேதி அறிவிப்பு?