×

சிறுதானியங்கள் பயிரிடுதல் குறித்த பயிற்சி முகாம்

சேந்தமங்கலம், பிப்.16: புதுச்சத்திரம் வட்டார வேளாண் அலுவலகத்தில் சிறுதானியங்கள் பயிரிடுதல் பயிற்சி முகாம் நடந்தது. புதுச்சத்திரம் வட்டார வேளாண்மை அலுவலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு, சத்துமிகு தானியங்கள்’ என்னும் தலைப்பில் பயிற்சி முகாம் நடந்தது.

வேளாண் அலுவலர் சாரதா தலைமை விகித்தார். முகாமை வேளாண்மை உதவி இயக்குனர் சித்ரா, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள், மானியங்கள், விதைகள், இடுபொருட்கள், வேளாண் கருவிகள், சொட்டுநீர் பாசனம், நுண்ணீர் பாசனம், சிறுதானியம் சாகுபடி விதைகள், மரக்கன்றுகள் குறித்தும் விவசாயிகள் அதிக அளவில் சிறுதானியங்களை பயிரிடுவதற்கு முன் வர வேண்டும்.

குறைந்த செலவில் அதிக மகசூல் பெற சிறுதானியங்களை தேர்வு செய்து, மண் பரிசோதனை செய்து அதற்கு ஏற்ப விதைகளை தேர்வு செய்து பயிரிட்டால் அதிக லாபம் பெறலாம் என விளக்கினார். முகாமில் ஏராளமான முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதில் துணை வேளாண் அலுவலர் கண்ணன், அட்மா தொழில்நுட்ப மேலாளர் சிந்துஜா, உதவி வேளாண் அலுவலர் ஜீவிதா, விமல், அயாஸ்கான், வைஷ்ணவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகளுக்கு மைக்ரோ கிரீன்ஸ் வளர்க்கும் முறை, அதன் ஊட்டச்சத்து நன்மைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

 

Tags : Senthamangalam ,Puduchattaram District Agriculture Office ,Agriculture and Farmers Welfare Department… ,
× RELATED 80 கட்டு வைக்கோலுடன் தீப்பிடித்து எரிந்த லாரி