×

பாலக்காடு கோட்டை மைதானத்தில் மக்கள் உடல்நலம், மனநிலை மேம்படுத்தும் சிறப்பு முகாம்

பாலக்காடு, பிப்.13: ஆயுஷ் துறை மற்றும் நேஷனல் ஆயுஷ் துறை சார்பில் பாலக்காடு கோட்டை மைதானத்தில் மாவட்ட அளவிலான சிறப்பு முகாம் நடந்தது. முகாமை உதவி கலெக்டர் ரவி மீனா தொடங்கி வைத்து பேசினார். மக்களின் உடல்நலம், மனநிலை, சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முகாம் நடைபெற்றது.

முகாமில் நல்ல ரீதியிலான உணவு, தேவையான உறக்கம், சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பெரிய அளவிலான யோகா, யோகா நடனம், தெரு நாடகம் மூலமாக விழிப்புணர்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட பஞ்சாயத்து பொதுப்பணித்துறை செயற்குழு தலைவர் ராஜூ தலைமை தாங்கினார்.

மாவட்ட மருத்துவ அதிகாரி ஆக்நஸ் கிளீட்ஸ் விழிப்புணர்வு வகுப்புகள் மக்களிடையே வழங்கினார். ஹோமியோபதி மாவட்ட மருத்துவ அதிகாரி கவிதா சிறப்புரை வழங்கினார். வார்டு கவுன்சிலர் பிரதீபா, நேஷனல் ஆயுஷ் மிஷன் மாவட்ட ஒருங்கிணைப்பு மேலாளர் சுனிதா, நோடல் அதிகாரி ஸ்ரீவிலாஸ், மாணவிகள், ஊழியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

 

Tags : Palakkad Fort Ground ,Palakkad ,AYUSH Department ,National AYUSH Department ,Assistant Collector ,Ravi Meena ,
× RELATED ஊட்டியில் கவுரவ விரிவுரையாளர்கள் 2வது...