×

விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் போராட்டம்

ஊட்டி,பிப். 14: ஊட்டி அரசு கலை கல்லூரியில் கவுரவ விாிவுரையாளர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவ, மாணவிகள் ேபாராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் 180 அரசு கல்லூரிகளில் பணியாற்றும் 8700 கவுரவ விரிவுரையாளர்கள் இதில் பங்கேற்றுள்ளளனர். கடந்த 9ம் தேதி முதல் கால வரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தை துவக்கி ஈடுபட்டு வருகின்றனர். கவுரவ விரிவுரையாளர்களின் தொடர் போராட்டம் காரணமாக கற்பிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 5வது நாளான நேற்று கவுரவ விாிவுரையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஊட்டி அரசு கலை கல்லூரி மாணவ, மாணவிகள் நுழைவுவாயில் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே சமயம் கவுரவ விரிவுைரயாளர்கள் ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்திற்கு பின் கலெக்டர் அலுவலகத்தில் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தனர்.

 

Tags : Ooty ,Ooty Government Arts College ,Tamil Nadu ,
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது