- பாரா வேர்ல்ட்
- பிரமோத்
- மனமா
- PWF பாரா உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்
- பிரமோத் பகத்
- இந்தோனேஷியா
- முகமது அல் இம்ரான்
மனாமா: பிடபிள்யுஎப் பாரா உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் போட்டிகள் மனாமா நகரில் நடந்து வருகின்றன. ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இந்தோனேஷியாவின் முகம்மது அல் இம்ரானுடன் இந்திய வீரர் பிரமோத் பகத் (37) மோதினார். அப்போட்டியில் அட்டகாச ஆட்டத்திறனை வெளிப்படுத்திய அவர் 21-12, 21-18 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி வாகை சூடினார். இதன் மூலம் அவருக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது. 6வது முறையாக இந்த போட்டிகளில் பிரமோத் பகத் தங்கப்பதக்கம் வெல்வது குறிப்பிடத்தக்கது.
