- WTT டேபிள் டென்னிஸ் இந்தியா
- சென்னை
- WTT ஸ்டார் போட்டியாளர் டேபிள் டென்னிஸ் போட்டி
- Melakottaiyur
- ஹர்மீத் தேசாய்
- யஷஸ்வினி கோர்பேட்
சென்னை: டபிள்யுடிடி ஸ்டார் கன்டென்டர் டேபிள் டென்னிஸ் போட்டிகள் சென்னை அருகே மேலக்கோட்டையூரில் நடந்து வந்தன. கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் நேற்று, இந்திய வீரர் ஹர்மீத் தேசாய், இந்திய வீராங்கனை யஷஸ்வினி கோர்படே இணை, போட்டித் தரவரிசையில் 2ம் இடத்தில் உள்ள ருமேனியாவின் எட்வர்ட் அயோனெஸ்கு, பெர்னாடெட் ஸாக்ஸ் இணையுடன் மோதியது. இப்போட்டியில் சிறப்பாக ஆடிய ருமேனியா இணை, 11-9, 11-2, 11-8 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடி சாம்பியன் பட்டம் பெற்றது. இந்திய இணை 2ம் இடம் பிடித்தது.
