கொழும்பு: டி20 உலகக்கோப்பை தொடரின் 27வது லீக் போட்டியில் இன்று இரவு 7 மணிக்கு கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டியில் ஏ பிரிவில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் மோதுகின்றன. உலகம் முழுவதும் இந்த போட்டி மீது கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் உள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
