×

சென்னையில் மின்னலாய் ஜொலித்த அமெரிக்கா: நமீபியாவை வீழ்த்தி அமர்க்களம்

சென்னை: உலகக் கோப்பை டி20 போட்டியில் நேற்று, அமெரிக்கா அணி, நமீபியாவை 31 ரன் வித்தியாசத்தில் வென்றது. ஐசிசி உலகக் கோப்பை டி20 தொடரின் 26வது போட்டி சென்னையில், ஏ பிரிவில் நேற்று நடந்தது. அதில் அமெரிக்கா – நமீபியா அணிகள் மோதின. முதலில் ஆடிய அமெரிக்கா அணியின் துவக்க வீரர்கள் கேப்டன் மொனான்க் படேல், ஷயான் ஜஹாங்கீர் சிறப்பாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் குவித்த நிலையில், ஷயான் 22 ரன்னில் அவுட்டானார்.

அடுத்து வந்த சைதேஜா முக்கமல்லா 17 ரன்னில் ஆட்டமிழந்தார். மொனான்க் படேல் 30 பந்தில் 52 ரன் எடுத்தார். பின் வந்த வீரர்களில் சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி 33 பந்துகளில் 68 ரன் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். 20 ஓவரில் அமெரிக்கா 199 ரன்கள் விளாசியது. அதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய நமீபியா அணியின் துவக்க வீரர் ஜேன் பிரைலிங்க் 19 ரன்னில் அவுட்டானார்.

மற்றொரு துவக்க வீரர் லோரென் ஸ்டீன்கேம்ப் 39 பந்தில் 58 ரன் விளாசினார். இருப்பினும் மற்ற வீரர்கள் ஜொலிக்காததால், நமீபியா, 20 ஓவரில் 6 விக்கெட் இழந்து 168 ரன் மட்டுமே எடுத்தது. அதனால், 31 ரன் வித்தியாசத்தில் அமெரிக்கா அபார வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் ஏ பிரிவில் 3ம் இடம் பிடித்தது.

Tags : USA ,Chennai ,Namibia ,World Cup ,World Cup T20 ,ICC World Cup T20 ,
× RELATED டி20 உலகக்கோப்பை : பாகிஸ்தான் அணிக்கு...