×

கொச்சியில் கொல்லப்பட்ட 6 வயது சிறுமி ஓராண்டாக பலாத்காரம்: பிரேத பரிசோதனையில் பகீர்: தந்தை மீது சந்தேகம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சி எளமக்கரை பகுதியில் ஒரு தம்பதி தங்களுடைய 6 வயது மகளுடன் வசித்து வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் இந்த சிறுமியின் தாய் வெளியே சென்றிருந்தார். மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது கணவனும், மகளும் இறந்த நிலையில் கிடந்தனர். அந்த சிறுமி கட்டிலிலும், தந்தை தூக்கு போட்ட நிலையிலும் காணப்பட்டனர். இது குறித்து அறிந்த எளமக்கரை போலீசார் விரைந்து சென்று இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் மகளை விஷம் கொடுத்து கொன்று தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மகளை கொன்று தந்தை தற்கொலை செய்து கொண்டதாக முதலில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் அந்த சிறுமி கடந்த 1 வருடமாக பலாத்காரம் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இறப்பதற்கு ஒரு சில மணி நேரத்திற்கு முன்பும் அந்த சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர். சிறுமியை பலாத்காரம் செய்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை மீது தான் போலீசுக்கு சந்தேகம் உள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் கொச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Kochi ,Thiruvananthapuram ,Eulamakkarai ,Kochi, Kerala ,
× RELATED ‘வெளியே போ’ என்று ஆவேசமாக கூறி பெண்...