சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை வங்கியில் எடுப்பது குறித்து தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்று தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் கூறியுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் நேற்று வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கிய உரிமைத் தொகையை வங்கியில் இருந்து 14ம் தேதி மாலைக்குள் எடுக்காவிட்டால் பணம் திருப்பி எடுக்கப்படும் என்ற தகவல் பரப்பப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு வழங்கக்கூடிய கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் சேர்த்து ரூ.5 ஆயிரம் வங்கி கணக்கிற்கு செலுத்தியது. இத்தொகையை அன்று மாலைக்குள் வங்கியில் இருந்து எடுத்து விட வேண்டும் என்பது முற்றிலும் தவறான தகவல். தமிழ்நாடு அரசு இதுபோன்ற எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. தவறான தகவலை பரப்பாதீர்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமை தொகை தவறான தகவல் பரப்ப வேண்டாம்: தமிழக அரசு சரிபார்ப்பகம் வேண்டுகோள்
- கலைஞர் பெண்கள்
- தமிழ்நாடு அரசு சரிபார்ப்பு நிறுவனம்
- சென்னை
- தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பு நிறுவனம்
- கலைஞர் மகளிர்…
