×

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன்… முதல்ல திரிஷாகிட்ட இருந்து விஜய் வெளியே வரணும்…இப்படி சொல்லிட்டாரே நயினாரு..!

தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை திருச்சி புறப்பட்டார். அப்போது அவர் சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ‘மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டத்தை, மத்திய அரசு முடக்குவதாக கூறுவது பொய். கரூரில் நடந்த தவெக மக்கள் சந்திப்பு கூட்டத்தில், 41 பேர் உயிரிழந்தனர். இன்று சேலத்தில் நடந்த அதே கட்சியின், மக்கள் சந்திப்பு கூட்டத்தில், ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய், முதலில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். திரிஷாவிடம் இருந்து வெளியே வர வேண்டும். அப்போதுதான் எல்லாம் நடக்கும். குடும்பங்களோடு நல்ல உறவு வைக்க வேண்டும். நல்ல தலைவர்கள் வழிநடத்திய இயக்கங்கள் பற்றி நல்ல முறையில் பேச வேண்டும். முதலில் அவர் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். களத்தில் ஒரு கவுன்சிலர் கூட இல்லாதவர் விஜய். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போக முடியுமா? ஒரு காலமும் முடியாது.

இதுதான் விஜய்க்கான பதில். விஜய் தனக்கு 32 சதவீதம் வாக்கு இருக்கிறது என எப்படி கூற முடியும்? அவர் முதலில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். விஜய் எல்லாம், எனக்கு ஒரு ஆளே கிடையாது. கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது. விஜயகாந்திற்கு கூடாத கூட்டமா? இவருக்கு கூடி விட்டது. நானும் அனுமான் போல், மலையை தூக்கிக் கொண்டு செல்ல முடியும் என கூறலாம். ஆனால் அதை செய்ய முடியுமா? விஜய்யால் தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

* இதை யாரிடம் சொல்வது விஜய்யை சந்திக்க காத்திருக்கும் செங்ஸ்…
திருச்சி விமான நிலையத்தில் நயினார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அமித்ஷா மிகப்பெரிய சக்தி அவர் ஒவ்வொரு முறை தமிழ்நாட்டிற்கு வந்து செல்லும் போதும் ஒவ்வொரு மாற்றங்கள் நடக்கும். தமிழக வெற்றிக் கழகத்திற்கு போட்டி திமுக மட்டும் தான் என அக்கட்சி தலைவர் கூறி வருகிறார். எங்கள் அண்ணன் செங்கோட்டையன் பாவம் விஜய்யை சந்திக்கவே முன் அனுமதி கோரி காத்துக்கொண்டிருக்கிறார். இதை யாரிடம் சொல்வது. எப்படி விஜய் வீட்டிலிருந்து வெளியே வந்து ஆட்சி செய்து மக்களை காப்பாற்ற போகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Vijay ,Trisha… ,Nainar ,Tamil Nadu ,BJP ,Nainar Nagendran ,Trichy ,Chennai airport ,central government ,
× RELATED மனமகிழ் மன்றம் செயல்பட தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு