வேப்பனஹள்ளி அருகே ஒற்றை யானை நடமாட்டம்: கிராம மக்களுக்கு எச்சரிக்கை

 

வேப்பனஹள்ளி, ஆக.3: வேப்பனஹள்ளி அருகே தொங்கனப்பள்ளி பகுதியில் ஒற்றை யானை நடமாடி வருகிறது. இந்த யானை இரவு நேரங்களில் தொங்கனப்பள்ளி, கே.கொத்தூர், தோட்டக்கணவாய், சிகரமாகனப்பள்ளி, பூதிமுட்லு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரிவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்த யானை அருகிலுள்ள விளை நிலங்களுக்குள் நுழைக்கூடும் என்பதால், விவசாயிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், அப்பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

Related Stories: