5 ரூபாய்க்கு முட்டை விற்பனை போட்டி, போட்டு வாங்கிய மக்கள்

 

போச்சம்பள்ளி, ஜூலை 29: நாமக்கல் மாவட்டத்திலிருந்து மாநிலம் முழுவதுமாக முட்டை விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. லாரி மற்றும் டெம்போ மூலம் வரும் முட்டைகளை மளிகை கடை, பேக்கரி, சூப்பர் மார்க்கெட், பாஸ்புட் ஓட்டல்களுக்கு மொத்தமாக விற்பனை செய்கின்றனர். கடைகளில் ஒரு முட்டை ரூ.7.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் கோழி பண்ணை நடத்தி வருபவர்கள் முட்டைகளை சேகரித்து அதை டெம்போ மற்றும் கார் மூலம் மக்கள் கூடும் இடங்கள் மற்றும் சந்தைகளில் கூவி கூவி குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். போச்சம்பள்ளி பகுதியில் ஒரு முட்டை ரூ.5க்கும், 30 முட்டை கொண்ட ஒரு அட்டை ரூ.150க்கும் விற்பனை செய்தனர். மளிகை கடை மற்றும் பெட்டிக்கடைகளில், முட்டை விலை அதிகரித்துள்ள நிலையில் வாகனங்களில் வைத்து கூவி கூவி விற்பனை செய்த முட்டைகளை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.

 

Related Stories: