- சென்னை
- இலங்கை
- T20 உலகக் கோப்பை கிரிக்கெட் போ
- இந்தியா
- -பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி
சென்னை: இலங்கையில் நடைபெற உள்ள இந்தியா – பாகிஸ்தான் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியைக் காண ஏராளமான ரசிகர்கள் இலங்கைக்கு விமானத்தில் பயணம் செய்து வரும் நிலையில், சென்னை – இலங்கை இடையே விமான கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை- இலங்கை இடையே சாதாரண நாட்களில் விமான கட்டணம் ரூ.7,127. ஆனால் 13ம் தேதி சென்னை- இலங்கை இடையே இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில், சாதாரண எக்கனாமி வகுப்பிற்கான கட்டணம் ரூ.22,073 முதல் வகுப்பு ரூ.25,207 வரையும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டணம் ரூ.42,231 வரையிலும் அதிகரித்துள்ளன. அதேபோல், வரும் 14ம் தேதி, சென்னை- இலங்கை இடையே, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டணங்கள் ரூ.20,708 முதல் ரூ.25,207 வரையிலும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டணங்கள், ரூ.35,217 வரையிலுமாக அதிகரித்துள்ளன. அந்தக் கட்டணங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. போட்டி நடக்கும் 15ம் தேதி, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் ரூ.18,283 முதல் ரூ.19,464 வரையிலும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ரூ.28,660 முதல் ரூ.42,231 வரையிலும் கட்டணம் அதிகரித்துள்ளது. வரும் 15ம் தேதி, இந்த கட்டணங்கள், மேலும் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.
