- தவேகா
- மாவட்டம்
- உதயகுமார்
- அனகாவூர் கிராமம்
- தமிழ்நாடு வெற்றி கிளப்
- திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம்
- வந்தவாசி
- யூனியன் சிட்டி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் செயலாளராக அனக்காவூர் கிராமத்தை சேர்ந்த உதயகுமார் உள்ளார். இவர், வந்தவாசி தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கட்சி தலைமை அறிவிக்கும் முன், அப்பகுதியில் உள்ள ஒன்றிய நகர செயலாளர் மூலமாக, வருங்கால சட்டமன்றமே என்ற பேனர் நகரம் முழுவதும் வைக்கப்பட்டு, இவரது பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.
இதற்காக உதயகுமாரை காரின் மேல் பகுதியில் நிற்க வைத்து, 5 கண் பாலத்தில் இருந்து ஊர்வலமாக கட்சி தொண்டர்கள் அழைத்து வந்தனர்.
அப்போது அண்ணா சிலை முன் தவெக தொண்டர்கள் ராட்சத கிரேன் மூலமாக மாலை அணிவித்து, உதயகுமாருக்கு வாள் வழங்கினர். அவ்வாறு வாள் பெற்ற உதயகுமார், அதை உயர்த்தி பிடித்தபடி காரில் வலம் வந்தார். கார் முன்பாக தொண்டர்கள், பைக்கில் தொடர்ந்து ஆரன் அடித்தவாறு அட்ராசிட்டியுடன் மெதுவாக ஊர்ந்து சென்றனர். இதனால் கடும் போக்குவரத்து பாதிப்படைந்து, பொதுமக்கள் வாகனங்களில் நீண்ட தூரம் வரிசையாக
நின்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சப்- இன்ஸ்பெக்டர்கள் விநாயகமூர்த்தி, முருகன் ஆகியோர் தவெகவினரிடம் வாகனங்களை வேகமாக இயக்கும்படி கூறினர்.
இதனை ஏற்காத தவெகவினர், போலீசாரை பார்த்து நாங்கள் சாலையில் வாகனத்தை நிறுத்துவோம், உங்களால் எங்களை என்ன செய்ய முடியும் என கூறி மிரட்டினர். பின்னர், பட்டாசு வெடித்து, 2 கி.மீ. தூரத்தை, ஒன்றரை மணி நேரமாக சென்றனர். இந்நிலையில், போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக வந்தவாசி டவுன் விஏஓ ரங்கம், வந்தவாசி தெற்கு போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, தவெக மாவட்ட செயலாளர் உதயகுமார், மாவட்ட இணை செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட 52 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார். இதைத்தொடர்ந்து, மாலை அணிவிக்க பயன்படுத்திய கிரேனை போலீசார் பறிமுதல் செய்து தெற்கு காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
* தியேட்டரு, பஸ்ல வேணும்னா விசிலடிக்கலாம்: விஜய்யை பங்கம் செய்த சி.வி.சண்முகம்
திண்டிவனத்தில் நேற்று நடந்த அதிமுகவின் செயல் வீரர்கள்- வீராங்கனைகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்பி பேசியதாவது: அதிமுக இன்றைக்கு வலுவான கூட்டணியை அதிமுக அமைத்துள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இருந்த களம், தற்போது இல்லை. அதிமுகவுக்கு சாதகமாக களம் மாறியுள்ளது. தற்போது சிலர் (விஜய்) வந்திருக்கிறார்கள். சினிமா தியேட்டரில் வேணும்னா விசில் அடிக்கலாம். பேருந்தை நிறுத்த வேணுமுன்னா விசில் அடிக்கலாம். அதிமுகவுக்கு, இரட்டை இலைக்கு வாக்களிப்பதை எந்த கொம்பனாலும் நிறுத்த முடியாது. யார் வந்தாலும் சரி, நாளை சிம்புகூட வரலாம். ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒன்னு முளைக்கும், முளைச்சுகிட்டுதான் இருக்கும். ஆனால் அதைப்பற்றி எல்லாம் நமக்கு கவலையில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
* சேலத்தில் நாளை விஜய் ஆலோசனை: செங்ஸ் கோஷ்டிக்கு தடை
தவெகவில் சேர்ந்த செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்தில் இருந்து அதிமுக மாஜி எம்எல்ஏக்களான எஸ்.இ.வெங்கடாசலம், ஓமலூர் பல்பாக்கி கிருஷ்ணன் ஆகியோரை த.வெ.க.வில் செங்கோட்டையன் இணைத்து விட்டார். வெங்கடாசலம், சேலம் தெற்கு தொகுதியில் போட்டியிட விருப்ப மனுவை கொடுத்துள்ளார். ஆனால் த.வெ.கவில் தற்போதைய மாவட்ட செயலாளராக இருக்கும் தமிழன் பார்த்திபன், தெற்கு தொகுதியை குறிவைத்து தற்போதே வேலைகளை செய்து வருகிறார். இந்நிலையில் நாளை (13ம் தேதி) நடிகர் விஜய் சேலம் வர இருக்கிறார். இதனால் தன்னுடைய ேதர்தல் அனுபவத்தை பயன்படுத்தி ஏற்பாடுகளை மேற்கொள்ளலாம் என ெவங்கடாசலம் நினைத்து, அதற்கான வேலையிலும் ஈடுபட முயன்றார்.
ஆனால் அப்பணிகளில் ஈடுபட வெங்கடாசலத்திற்கு மேலிடத்தில் இருந்து தமிழன் பார்த்திபன் தடை பெற்றுள்ளார். எந்த வேலையாக இருந்தாலும் நான் பார்த்துக்கொள்வேன், யாரும் உள்ளே வரவேண்டாம் என கூறிவிட்டார். இதனால் செங்கோட்டையன் உள்ளிட்டோர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்களை பொறுமையாக இருக்குமாறு கூறியுள்ளார். தமிழன் பார்த்திபன் நடிகர் விஜய், மக்கள் இயக்கம் தொடங்கியதில் இருந்தே மாவட்ட செயலாளராக இருந்து வருவதுடன், அவருடன் சேர்ந்து சினிமாவிலும் நடித்து வருகிறார். இதன்மூலம் விஜய்யுடன் அவருக்கு நெருங்கிய செல்வாக்கு இருக்கிறது. சேலம் மாவட்டத்தில் மற்ற மாவட்ட செயலாளர்கள் இவரால் தான் நியமிக்கப்பட்டவர்கள். இதனால் அவருடன் யாரும் மோதல் போக்கை கடைபிடிக்காமல் இருந்து வருகின்றனர்.
