×

பொதுத்துறை புதுமை மற்றும் நிலையான வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு, UNICEF மற்றும் OECD இடையே முத்தரப்பு ஒப்பந்தம்!

சென்னை: தமிழ்நாடு அரசு, யூனிசெஃப் (UNICEF) புதுமை அலுவலகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) ஆகியவற்றுக்கிடையே செயலாற்றும் வகையில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தந்த்தின் மூலம் தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் புதுமைகள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த வளர்ச்சியை நோக்கமாக கொண்ட ஆளுகைக்கான சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது.

ஜனவரி மாதம் 05 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரும், மாநில திட்டக் குழுவின் தலைவருமான மு. க. ஸ்டாலின், மற்றும் மாநிலத் திட்டக் குழுவின் அலுவல் சார் துணைத் தலைவர் மற்றும் துணை முதலமைச்சர், உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் யூனிசெஃப், மற்றும் மாநில திட்ட குழுவிற்கு இடையேயான ஒப்பந்தம் கையெழுத்தானது. இவ்வொப்பந்த்ததிற்கு தேவையான நிபுணத்துவ ஆலோசனையை, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) , பொதுத்துறை கண்டுபிடிப்புகளின் கண்காணிப்பகம் OPSI, பாரிஸ் வழங்க முன்வந்துள்ளது.

முதல்முறையாக, துணை தேசிய அளவில் பன்னாட்டு நிறுவனங்களுடன் தமிழ்நாடு மாநில திட்டக்குழு, மேற்க்கொண்டுள்ள இவ்வொப்பந்தம், தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களின் சாதனைகளுக்கு ஒரு மைல் கல்லாக அமைகிறது. இது தமிழக அரசின் சமூக புதுமை மற்றும் வளர்ச்சிக்கான மாற்றம் ஆகியவற்றிற்கு கிடைத்த அங்கீகாரம் ஆகும்.

இதன் தொடர்ச்சியாக, மாநில திட்டக் குழுவின் பிரதிநிதிகள் அடங்கியக் குழு ஜனவரி 21 மற்றும் 22, 2026 ஆகிய தேதிகளில் பாரிஸ் நகரில் அமைந்துள்ள பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) யின் தலைமையகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று அவ்வமைப்பின் உயர் அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை வல்லுநர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டது.

மேலும் மாநில திட்டக் குழுவின் பிரதிநிதி குழுவினர் ஜனவரி 26 மற்றும் 27, 2026 இல் ஸ்டாக் ஹோம்-ல் நடைபெற்ற UNICEF COMPASS நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் 15க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது, மாநில திட்டக் குழுவின் செயல் துணைத் தலைவர் டாக்டர் ஜெ.ஜெயரஞ்சன், கொள்கை வடிவமைத்தல் மற்றும் பொது சேவை வழங்கலில் புதுமையை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த அனுகுமுறையை தமிழ்நாடு அரசு நோக்கமாகக் கொண்டு செயல்படுவது குறித்த விவரங்களை விவரித்தார். மாநில அரசின் வளர்ச்சி, மாநிலத்தின் நலன்சார்ந்த மாதிரியானது – பல்வேறு வளர்ச்சி திட்டங்களான, முதலமைச்சரின் காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம், விடியல் பயணம், நான் முதல்வன் திட்டம் ஆகியவற்றின் வாயிலாக சத்துணவு, கல்வி,பாலின மேம்பாடு, திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதாரம் ஆகியவற்றில் சீரான வளர்ச்சி அடைந்துள்ளது. மேற்கண்ட திட்டங்களின் வாயிலாக தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட வாய்ப்புகள் திட்ட பரவல், சமத்துவம் உள்ளிட்ட பல்வேறு நலன்களை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசின் அனுபவம் மாதிரித் திட்டம் முதல் கொள்கை வடிவமைப்பு மற்றும் அதனை நிறுவனப்படுத்துதல் வரை யூனிசெஃப் – ஆல் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அதன் இணைப்பு பின்வருமாறு.

மேலும் இந்நிகழ்வுகள் மாநில திட்டக்குழுவின் பிரதிநிதிகள் குழு, அரசு மற்றும் அரசு சார் நிருவாகத்தில் புதுமையை ஊக்குவிக்கும் நோக்குடன் மாநில திட்டக் குழு செயல்பட்டு வரும் ஆளுகைக்கான புத்தாக்க மையத்தின் செயல்பாடுகள், நிர்வாக கட்டமைப்பு, மின்னணு நிருவாகம்( டிஜிட்டல் நிர்வாகம்), பல்வேறு அரசு துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகள் குறித்து விரிவாக விவரிக்கப்பட்டது.

இவ்வொப்பந்தத்தின் வாயிலாக, மாநில அளவிலான பொது துறைகளுக்கான புதுமை கொள்கை உருவாக்கம், புத்தாக்கத்திற்கான கட்டமைப்பு உருவாக்கம் , மாநில புத்தாக்க குறியீடு, பொதுத்துறையில் புதுமை முயற்சிகளுக்கான கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு கட்டமைப்புகளை உருவாக்கம் அரசுத்துறைகளுக்கு திறன் மேம்பாடு பயிற்சிகள் வழங்குதல் ஆகிய செயல்பாடுகள் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளன.

இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக மேற்கண்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த ஏதுவாக பல்வேறு துறை நிபுணர்கள் அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பல்வேறு தலைசிறந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய பணிக்குழு அமைக்கப்பட்டு செயல்விளைவுகள் சார்ந்த கொள்கை வகுத்தல் மற்றும் நடைமுறைப்படுத்தலை உரிய காலக்கெடுவுக்குள் செயல்படுத்த உதவும் இந்த முயற்சி, பொதுத்துறை நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கும், நிலையான மற்றும் விரைவான செயல்பாடு மற்றும் பொதுமக்களின் நலனை மையமாகக் கொண்ட நிருவாக அமைப்பாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் நோக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

Tags : Government of Tamil Nadu ,UNICEF ,OECD ,Public Sector Innovation ,Sustainable Development ,Chennai ,UNICEF Innovation Office ,Organisation for Economic Co-operation and Development ,
× RELATED மனைவிக்கு புற்றுநோய் பாதிப்பு...