×

திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.700 கோடி மதிப்பிலான 226 ஏக்கர் நிலங்கள் மீட்பு: அறநிலையத்துறை தகவல்

சென்னை: சென்னையை அடுத்த திருப்போரூர் கந்தசாமி கோயில் மற்றும் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான சொந்தமான 550 எக்கர் நிலம் ஆக்கிரமிப்பிள் உள்ளதாகவும்., அதனை மீட்க உத்தரவிடவேண்டும் என கூறி வழக்கறிஞர் ஜெகநாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்றம் 2028 மே மாதத்திற்குள் ஆகிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை என கூறி வழக்கறிஞர் ஜெகநாத் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிஎம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற உத்தரவுப்படி இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், திருப்போரூர் கந்தசாமி கோயில் செயலாளர் குமாரவேல் ஆகியோர் நேரில் ஆஜராகினர்.

அப்போது அவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.700 கோடி மதிப்பிலான 226 ஏக்கர் விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்தார். இதனை ஏற்றுகொண்ட நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Tags : Thiruporur Kandasamy Temple ,Department of Charities ,Chennai ,Jagannath ,Madras High Court ,Alavanthar Trust ,
× RELATED இந்தியாவின் ஜவுளித்துறையை வங்கதேசம்...