சென்னை: இந்தியா – பாகிஸ்தான் போட்டியால் இலங்கை செல்வதற்கான விமான டிக்கெட் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பிப்.15ம் தேதி சென்னை – இலங்கை செல்லும் விமான டிக்கெட் கட்டணமும் பல மடங்கு உயர்ந்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வழக்கமாக சுமார் ரூ.9,000 வரை உள்ள சென்னை – இலங்கை விமான டிக்கெட் கட்டணம் ரூ.43,000 வரை அதிகரித்துள்ளது.
