×

திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.700 கோடி மதிப்பிலான 226 ஏக்கர் நிலங்கள் மீட்பு: ஐகோர்ட்டில் அறநிலையத்துறை அறிக்கை

சென்னை: திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.700 கோடி மதிப்பிலான 226 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டது. ஆக்கிரமிப்பில் இருந்து நிலம் மீட்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை அறிக்கை. அறநிலையத் துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துவைத்தது உயர்நீதிமன்றம். கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் அகற்றவில்லை என வழக்கு தொடரப்பட்டது. வழக்கறிஞர் ஜெகநாத் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags : Thiruporur Kandasamy ,Endowments Department ,Court ,Chennai ,Thiruporur Kandasamy temple ,High Court ,
× RELATED மனைவிக்கு புற்றுநோய் பாதிப்பு...