பறவை காய்ச்சல் எதிரொலியால் கோழி இறைச்சி விலை வீழ்ச்சி!

சென்னை: ஆந்திராவில் பறவைக்காய்ச்சல் பரவுவதால், திருவள்ளூர் மற்றும் சென்னைப் புறநகரப்பகுதிகளில் கோழி இறைச்சி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. 3 நாட்களுக்கு முன்பு ரூ.280க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கோழிக்கறி, தற்போது ரூ.220ஆக குறைந்துள்ளது.

சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சில தினங்களுக்கு முன்பு பல காகங்கள் திடீரென உயிரிழந்ததையடுத்து, அவற்றின் மாதிரிகளை பரிசோதித்ததில் அவற்றுக்கு பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும் ‘தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. மக்களுக்கு பறவை காய்ச்சல் பரவவில்லை. இறைச்சிகளை நன்கு வேகவைத்த பிறகே சாப்பிட வேண்டும். காகம், கோழி போன்ற பறவைகள் உயிரிழந்தால் அவற்றை ஆழமாக குழிதோண்டி புதைக்க வேண்டும்’ எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் ஆந்திராவில் பறவைக்காய்ச்சல் பரவுவதால், திருவள்ளூர் மற்றும் சென்னைப் புறநகரப்பகுதிகளில் கோழி இறைச்சி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. 3 நாட்களுக்கு முன்பு ரூ.280க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கோழிக்கறி, தற்போது ரூ.220ஆக குறைந்துள்ளது. பறவைக்காய்ச்சல் பரவுவதாக பரவி வரும் செய்தியால் கோழிக்கறி, முட்டையை சாப்பிடுவதில் பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

 

Related Stories: