ஊட்டியில் பனிப்பொழிவு எதிரொலி; மலை காய்கறி பயிர்களுக்கு மைக்ரோ ஸ்பிரிங்லரில் நீர் பாய்ச்சும் விவசாயிகள்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் உறைபனிப் பொழிவு நிலவி வருகிறது. இதனால் விவசாயிகள் மலை காய்கறிகளுக்கு மைக்ரோ ஸ்பிரிங்லர் மூலம் நீர் பாய்ச்சி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவ மழை பெய்யும். அதன் பின் பருவ மழை நிறைவு பெற்று நீர் பனிப்பொழிவுடன் பனி சீசன் துவங்கும். தொடர்ந்து பிப்ரவரி இறுதி வரை உறை பனிப்பொழிவு நீடிக்கும். இந்நிலையில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை சராசரியை விட அதிகம் பெய்தது.

தொடர்ந்து வடகிழக்கு பருவமழை, புயல் காரணமாக கடந்த டிசம்பர் இரண்டாவது வாரம் வரை மழை நீடித்தது. அதன் பின் உறைபனி பொழிவு நீடித்து வருகிறது. கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் நடப்பாண்டு பனிப்பொழிவின் தாக்கம் தீவிரமாக உள்ளது. ஊட்டி சுற்று வட்டார பகுதிகள் மற்றும் மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு மற்றும் அதிகாலை வேலைகளில் பனிப்பொழிவு காணப்படுகிறது. சில நாட்கள் உறைபனியும் பொழிகிறது. இதனால் கடும் குளிர் நிலவி வருகிறது. பனிப்பொழிவு காரணமாக மலை காய்கறி பயிர்கள் பாதிப்பதை தவிர்க்கும் வண்ணம் விவசாயிகள் ஸ்பிரிங்லர் பயன்படுத்தி தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.

Related Stories: