சென்னை: மார்ச் 12 முதல் 15 வரை நடைபெற இருந்த மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கான தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. மார்ச் 22 முதல் 25ம் தேதி வரை மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கான தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வில் பங்கேற்கும் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் மார்ச் 12ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
