- மாடல் வாக்கல் மையம்
- திரிதானி திரிதானி
- திரிதானி
- கோடேட்டியர்
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்
- திரித்தானி சட்டமன்ற தொகுதி
திருத்தணி: திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில், மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைத்து மின்னணு வாக்குப்பதிவு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், திருத்தணி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் முன் னேற்பாடு தீவிரமடைந்துள்ளது. 330 வாக்குச்சாவடிகளை கோட்டாட்சியர் கனிமொழி தலைமையில் வருவாய்த்துறையினர் பார்வையிட்டு குடிநீர், கழிப்பிடம், மின்விசிறி உள்ளிட்ட வசதி ஏற்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர். இதுபோல் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நேற்று திருத்தணி கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட் மூலம் வாக்காளர்கள் வாக்களித்து சரி பார்த்துக்கொள்ளும் செயல்முறை விளக்கங்கள் மாதிரி வாக்குப்பதிவு மூலம் தெளிவுபடுத்தப்பட்டது. கோட்டாட்சியர் அலுவலகம் வரும் பொதுமக்கள், மாதிரி வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகளை தெரிந்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்கள் வேட்பாளருக்கு வாக்களித்ததை உறுதி செய்ய விவி பேட் திரையில் வாக்களித்த சின்னம் 7 வினாடிகள் தெரிவதை உறுதி செய்துக்கொள்வது அவசியம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதுபோல் திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் நடமாடும் மாதிரி வாக்குச்சாவடி மையம் மூலம் பொதுமக்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
