×

இடைக்கால பட்ஜெட் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: இடைக்கால பட்ஜெட் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர் பங்கேற்றுள்ளனர். பிப்.17ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டுக்கு அண்மையில் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது

தமிழ்நாடு சட்டப்பேரவை 26(1)ன் கீழ் தமிழ்நாடு சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத் தொடர் பிப்.17ம் தேதி காலை 9.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள சட்டமன்றப் பேரவையில் கூட்டப்படவுள்ளது. அன்று 2026-27ம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் தங்கம் தென்னரசால் வாசித்து அளிக்கப்படும். பிப்.20ம் தேதி சட்டமன்ற பேரவை விதி 193 (1)ன் கீழ் 2026-27ம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கையும், சட்டமன்ற பேரவை விதி 189(1)ன் கீழ் 2025 – 26ம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகளும் சட்டமன்றத்தில் வாசித்து அளிக்கப்படும்.

இந்த சட்டப் பேரவையின் கடைசி கூட்டத் தொடர் என்பதாலும், சட்டமன்ற தேர்தல் வரவிருப்பதாலும் இடைக்கால பட்ஜெட்டில் புதிய சலுகைகள், அறிவிப்புகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Interim Budget ,Chief Minister ,Mu. K. Stalin ,Chennai ,MLA ,General Secretariat ,K. Stalin ,Finance Minister ,Gold South Rasu ,Chief Secretary ,Finance Secretary ,Tamil Nadu Legislative Assembly ,Tamil Nadu ,
× RELATED நாடாளுமன்றத்தில் பெரும் புயலை...