- சுவாமி-அம்பலா விடியுலா
- ராமேஸ்வரி
- மகா சிவராத்திரி விழா
- ராமேஸ்வரம்
- இராமேஸ்வரம் கோயில்
- மகா சிவராத்திரி
- கெண்டமாதன பார்வம் மண்டகாடி
- ராமநாதபுரம் மாவட்டம்
- ராமேஸ்வர ராமநாதசுவாமி கோவில்
- மாசி மகாசிவராத்திரி
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் மகாசிவராத்திரி 3ம் திருநாளை முன்னிட்டு சுவாமி-அம்பாள் வீதியுலா வந்து கெந்தமாதன பர்வதம் மண்டகப்படியில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி இன்று பகல் முழுவதும் கோயில் நடை அடைக்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், மாசி மகாசிவராத்திரி திருவிழாவின் 3ம் உற்சவ திருநாளான இன்று காலை சுவாமி-பர்வதவர்த்தனி அம்பாள் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 2.30 மணி முதல் 3 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடந்தது. பின் சுவாமி சன்னதியில் கால பூஜைகள் நடைபெற்று காலை 7 மணிக்கு ராமநாதசுவாமி வெள்ளி பூத வாகனத்திலும், பர்வதவர்த்தினி அம்பாள் வெள்ளி கிளி வாகனத்திலும் பஞ்ச மூர்த்திகளுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கெந்தமாதன பர்வதம் மண்டகப்படியில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயிலில் இருந்து சுவாமி-அம்பாள் புறப்பாடான பிறகு கோயில் நடை அடைக்கப்படும்.
இதனால், காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கோயில் நடை அடைக்கப்பட்டு 22 தீர்த்தங்களில் பக்தர்கள் தீர்த்தமாடுதலும் நிறுத்தப்படும். பர்வதம் மண்டகப்படியில் இன்று மாலை 5 மணிக்கு மேல் சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டு அங்கிருந்து சுவாமி-அம்பாள் புறப்பட்டு கோயிலை வந்தடைந்ததும், இரவில் மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி சன்னதியில் அர்த்த ஜாம பூஜையினைத் தொடர்ந்து பள்ளியறை பூஜைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
