- நிகிதா
- மதுரை
- மதுரை மாவட்ட நீதிமன்றம்
- போயிப்
- மடபுரம்
- கோவில்
- அஜித் குமார்
- மாடபுரம் காளியம்மங்கோ, சிவகங்கை மாவட்டம்
மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் பொய்ப் புகார் அளித்த நிகிதா மார்ச் 4ம் தேதி ஆஜராக மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், மடப்புரம் காளியம்மன்கோவில் காவலாளி அஜித்குமார், நகை திருடியதாக தொடர்பாக தனிப்படை போலீசார் தாக்கி கொலை செய்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நான்கு தனிப்படை போலீஸ்காரர்கள் ஜாமீன் கோரி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி,
‘செய்யாத குற்றத்திற்காக ஒருவரை அடித்தே கொலை செய்துள்ளனர். இவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். புகார் அளித்த நிகிதா பொய்யான புகார் அளித்ததாக சிபிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் மீது சிபிஐ விசாரணை மேற்கொண்டதா என கேட்டிருந்தார். இந்த நிலையில், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் அஜித்குமார் கொலை வழக்கில் நிகிதாவை அழைத்து விசாரிக்க வேண்டும் என சிபிஐ மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை இன்று விசாரித்த மதுரை மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செல்வபாண்டி, வருகிற மார்ச் 4ம் தேதி நிகிதா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இந்த வழக்கில் பொய் புகார் அளித்த நிகிதா நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
