கறம்பக்குடி விவசாயிகளுக்கு இயற்கை பூச்சி கட்டுப்பாடு செயல்முறை விளக்க பயிற்சி

*வேளாண் கல்லூரி மாணவிகள் வழங்கினர்

கறம்பக்குடி : கறம்பக்குடி அருகே சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மாணவிகள் பறவை அமர்வு கம்பம் முறையால் இயற்கை பூச்சி கட்டுப்பாடு வயல் செயல்முறை விளக்க பயிற்சி விவசாயிகளுக்கு வழங்கினர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருவரங்குளம் வேளாண் வட்டாரத்திற்கு உட்பட்ட காயம்பட்டி கிராமத்தில் வயல் பயிர்களில் பூச்சியின் தாக்கத்தை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் நோக்கில் பறவை அமர்வு கம்பம் முறை குறித்த வயல் செயல்முறை விளக்க காட்சி சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் செய்து காட்டினர்.

இந்த செயல்முறை விளக்க காட்சியில் மாணவிகள் விவசாயிகளுக்கு பறவை அமர்வு கம்ப முறையும் முக்கியத்துவம் மற்றும் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

இம்முறையில் வயலில் தேவையான இடைவெளியில் மர அல்லது மூங்கில் கம்பங்களை நட்டு அதன் மேல் பறவைகள் அமர்வதற்கான கம்பம் அமைக்க படுகிறது. இதன் மூலம் மைனா, காக்கை, சிட்டு குருவி போன்ற பறவைகள் வயலில் அமர்ந்து இலை புழு, வெட்டு புழு, தண்டு துளை புழு போன்ற தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை உணவாக உட்கொள்வது செய் முறையாக காண்பிக்க பட்டது.

இந்த முறையின் மூலம் ரசாயண பூச்சி கொல்லி பயன்பாடு முறையும் இயற்கை பூச்சி கட்டுப்பாடு கிடைக்கும் செலவு குறைந்த சுற்று சுவர் நட்பு முறை மண் மற்றும் பயிர் ஆரோக்கியம் மேம்படும் என்பதை மாணவிகள் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.

நிகழ்ச்சி யில் கலந்து கொண்ட விவசாயிகள் பறவை அமர்வு கம்பம் அமைப்பதை நேரில் பார்த்து தங்களது சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற்றனர். இம்முறையில் அனைத்து வகை பயிர்களிலும் எளிதாக பயன்படுத்த கூடியது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த செய்முறை விளக்க காட்சிகள் இயற்கை மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி வேளாண்மை முறைகளை ஊக்கு வித்து விவசாயிகளின் செலவை குறைக்க உதவும் என மாணவிகள் தெரிவித்தனர்.

முகாமில் சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகளான பானுப்ரியா, தருனிஷா, பவி தேவி, பொற்ச்செல்வி, ரேஸ்மி கிருஷ்ணா, சுவாதி ஆகிய மாணவிகள் கலந்து கொண்டு செயல்முறை விளக்க பயிற்சி அளித்தனர்.

இந்த செயல் முறை விளக்க பயிற்சியில் விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு இயற்கை முறை பறவை அமர்வு கம்பம் முறையில் இயற்கை பூச்சி கட்டுப்பாடு வயல் செயல்முறை விளக்கங்களை தெரிந்து கொண்டனர்.

Related Stories: