எஸ்ஐஆர் பணியில் இடையூறு ஏற்படுத்த அனுமதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தை முடிப்பதில் யாரும் எந்த இடையூறும் ஏற்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. மே.வங்க மாநிலத்தில் எஸ்ஐஆர் பணி குறித்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யாகாந்த், நீதிபதிகள் ஜோய்மல்யா பாக்சி, என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறும்போது,’ எஸ்ஐஆர் பணியில் யாருக்கும் எந்த இடையூறும் ஏற்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த விஷயத்தில் அனைத்து மாநிலங்களும் தெளிவாக இருக்க வேண்டும். மேற்குவங்கத்தில் தேர்தல் குழுவிற்கு வழங்கப்படும் 8,505 குரூப் பி அதிகாரிகளுக்கு எஸ்ஐஆர் செயல்பாட்டில் பயிற்சி அளிக்கப்பட்டு பணியமர்த்தப்படலாம். இந்த 8,505 அதிகாரிகள் இன்று மாலை 5 மணிக்குள் மாவட்ட தேர்தல் அதிகாரி அல்லது இஆர்ஓவிடம் பணிக்கு வருவதை மே.வங்கம் உறுதி செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டனர்.

Related Stories: