புதுடெல்லி: ரூ.40 ஆயிரம் கோடி வங்கி மோசடி தொடர்பான புகாரில் அனில் அம்பானி குழுமம் மற்றும் அது தொடர்புடைய குழுமத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமலாக்கத்துறை அமைத்துள்ளது. அனில் அம்பானி குழுமம் மற்றும் இது தொடர்புடைய நிறுவனங்கள் மீது ரூ.40,000 கோடி மதிப்புள்ள வங்கி மற்றும் பெருநிறுவன மோசடி புகார்கள் எழுந்துள்ளன. இதுபற்றி அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக ரூ.12 ஆயிரம் கோடி சொத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் அனில் அம்பானி குழுமத்தை விசாரிக்க அமலாக்க இயக்குநரகம் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது. இதில் கூடுதல் இயக்குநர் தலைமையில் 6 அதிகாரிகள் இடம் பெற்றுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
