பஸ்சுல துண்டு போட்டு இடம் புடிச்ச கதை! மாதம் ரூ.2 லட்சம் வாடகை…ப்பா…!

 

கோவை மாவட்டம் வால்பாறை (தனி) சட்டமன்ற தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு, இலைக்கட்சியில் தலைவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஏற்கனவே, கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த ஒரு தனியார் பள்ளி தாளாளர் வால்பாறையில் முகாமிட்டு, சீட் எனக்குத்தான் எனக்கூறி கட்சியினரிடையே கரன்சியை விதைத்து வருகிறார். இப்பவே களப்பணியையும் துவக்கிவிட்டார்.

தற்போது, பொள்ளாச்சி நகராட்சி 8வது வார்டு கவுன்சிலர் வசந்த் என்பவரும் களத்தில் குதித்துள்ளார். இவரும், வால்பாறையில் முகாமிட்டு, ஆதரவாளர்களை திரட்டி வருகிறார். இவர், மாதம் ரூ.2 லட்சம் வாடகையில் தனி காட்டேஜ் புக் செய்து, அங்கேயே முகாமிட்டுள்ளார். ‘‘தலைவர்… பஸ்சுல துண்டு போட்டு சீட் புடிச்ச கதையில.. 2 லட்சம் ரூபாய் போட்டு, காட்டேஜ் புடிச்சி வெச்சிருக்காருப்பா…’’ என இவரது ஆதரவாளர்கள் குஷியில் இருக்கிறார்கள்.

இவர், கோவை புறநகர் தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருப்பதால், சமூக வலைதளங்களில், தனக்குத்தான் சீட் என வேகமாக தகவல் பரப்பி வருகிறார். ‘‘திருவிழாவில் ஆடு அறுப்பதற்கு முன்பு… மற்றது எனக்குத்தான்…’’ என்ற பழமொழிக்கு ஏற்ப, ஆளாளுக்கு வால்பாறையில் முகாமிட்டு, அலப்பறை பன்றாங்களே….ப்பா… என இலைக்கட்சியினர் புலம்பி தள்ளுகின்றனர்.

Related Stories: